100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கமா? – செளந்தரராஜன் பதில்!

அரசியல்

ஒரே வண்டியை மூன்று ரூட்டுகளில் மாற்றி மாற்றி ஓட்டி பேருந்து இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறார்கள் என சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் அனைத்து பணிமனைகள் முன்பாகவும் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை பல்லவன் இல்லத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் செளந்தரராஜன், “அரசிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் எங்களுடைய கூட்டமைப்பிற்கு வரவில்லை.

ஊடகங்கள் மூலமாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் பேசிக்கொண்டிருக்கிறார். நாங்கள் ஏதோ பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பது போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் முயற்சிக்கிறார்.

பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கட்டாயமாக வரத் தயராக இருக்கிறோம். எங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக தான் மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன்பாக போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறோம்.

முழுக்க முழுக்க வெளி ஆட்களை வைத்து சட்டவிரோதமாக பேருந்துகளை இயக்குகிறார்கள். ஒரே வண்டியை மூன்று ரூட்டுகளில் மாற்றி மாற்றி ஓட்டி பேருந்து இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயலாகும். பணிக்கு வராதவர்களுக்கு மெமோ கொடுக்க லிஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்

தொழிற்சங்கத்தினருடைய கோரிக்களை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர் சிவசங்கர் பொய் சொல்கிறார். ஓய்வூதியர்களின் பஞ்சப்படியை எட்டு ஆண்டுகளாக நிறுத்தியிருக்கிறார்கள்.

நிதிச்சுமையை காரணம் காட்டி எங்களது கோரிக்கையை அரசு நிராகரிக்க கூடாது. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் எதையும் போக்குவரத்து கழகம் நிறைவேற்றவில்லை. எனவே உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பஸ் ஸ்ட்ரைக்: பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டம்!

முரசொலி பஞ்சமி நில விவகாரம்: விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Comments are closed.