அந்த சிண்ட்ரெல்லாவுக்காக ஒத்த செருப்பு காத்திருக்கிறது: பிடிஆர் நக்கல்!

அரசியல்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தின் மையப் புள்ளியான நிதியமைச்சர் இந்த விவகாரத்தை தமக்கே உரிய மொழி நடையோடு நக்கலாகக் கையாண்டிருக்கிறார்.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த லட்சுமணன் என்பவரது உடல் நேற்று (ஆகஸ்டு 13) மதுரை கொண்டு வரப்பட்டது. அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்துவதற்காக விமான நிலையம் வந்தார்.

அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் ஆகியோர் பாஜகவினருடன் விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பும் போது, பாஜகவினரில் பெண் ஒருவர் அமைச்சரின் காரை நோக்கி செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிடிஆர் தலைக்கணம் பிடித்தவர் என்றும், அவர் எங்கு சென்றாலும் பாஜகவினர் எதிர்ப்போம் என்றும் ஆக்ரோஷமான பேசினார் சரவணன். திடீரென நேற்று இரவே பிடிஆரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் செயல்படுவதால், சரவணனனை கட்சியில் இருந்து நீக்குவதாக அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டதற்கு திமுகவினர் கொந்தளித்து கொண்டிருக்கும் போது, பிடிஆர் கூலாக நக்கலாக போட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அவரது ட்விட்டர் பதிவில், ‘நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக பிறகு விரிவாக பேசலாம். ஏர்போர்ட்டின் 100 மீட்டருக்கும் அதிகமான பாதுகாப்பு பகுதிக்குள் தனது கட்சிக்காரர்களுடன் வந்த அந்த சிண்ட்ரெல்லா தனது செருப்பை திரும்ப பெற விரும்பினால், அதனை உங்களுக்காக எனது ஊழியர்கள் எடுத்து வைத்துள்ளார்கள்’ என நக்கலடித்துள்ளார்.

தனது பதிவின் மூலம் மறைமுகமாக மற்றொரு கேள்வியும் எழுப்பியுள்ளார் பிடிஆர். பாதுகாப்பு பகுதிக்குள் பாஜக தொண்டர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்றும் கேட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெயப்பிரியா

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: ஒருவர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *