போலி வீடியோக்களை பரப்பி தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் பரவியது. இதனால் அவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். போலியான வீடியோக்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்தார்.
வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அரணாக உள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், லோக் ஜனசக்தி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பஸ்வான் சென்னை வந்தார்.
தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய நிலைமையை கேட்டறிந்தார்.
பின்னர் பல்லாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்களை வட மாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம். இது தமிழர்களையும் வட இந்தியர்களையும் பிரிக்கும் முயற்சியாகும்.
இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை இருக்கிறது. போலி செய்திகளை பரப்புவோரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். பீகாருக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது.” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்துமாறு மனு அளித்தார்.
செல்வம்
ஷூட்டிங்கில் விபத்து… அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு உடைந்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!
லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ சோதனை!