ஆளுநரைச் சந்தித்த தலைமைச் செயலாளர் முருகானந்தம்: ஏன்?

Published On:

| By Kavi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று (ஆகஸ்ட் 22)  பிற்பகல் சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் ஏற்படலாம் என காலை முதலே செய்திகள் வெளியாகின. குறிப்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ சேனலான ‘கலைஞர் டிவியில்’ இந்த செய்தி வெளியானதும், கண்டிப்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டது.

ஆனால் முதல்வர் ஸ்டாலினே இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவரிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘எனக்கு தகவல் வரவில்லை’ என கூறி சிரித்தப்படி சென்றார்.

இந்தசூழலில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை  சந்தித்துள்ளார். பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கரும் அவருடன் சென்றிருந்தார்.

புதிதாக தலைமைச் செயலாளராக பதவி ஏற்பவர் ஆளுநரைச் சந்திப்பது மரபு . அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற முருகானந்தம் ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இது, மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

கருவிலேயே கலையாதவன்… எதை தொட்டாலும் பண மழைதான்… ரொனால்டோ படைத்த புதிய சாதனை!

மிதமான மழைதான்…மக்களே ரிலாக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment