திருவண்ணாமலையில் இன்று (மே 11) முதல்வர் ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் கண்காட்சி மக்களின் பார்வைக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை திருவண்ணாமலை பொதுமக்கள் பார்வைக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் சேர்ந்து நடிகர் ஜெயம் ரவி இன்று (மே 11) தொடங்கி வைத்தார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சார்பில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சார்பில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
இன்று (மே 11) தொடங்கி மே 17 வரை அமைச்சர் எ.வ.வேலு சார்பில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்து அமைச்சரும், நடிகர் ஜெயம் ரவியும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, “அமைச்சர் எ.வ.வேலுவின் அழைப்பின் பேரில் வந்திருக்கிறேன். இதற்கு முன்னதாகவும் திருவண்ணாமலைக்கு ஷூட்டிங்கிற்கும், அமைச்சரின் கல்லூரிக்கும் வந்திருக்கிறேன். அப்பாவின் நண்பர் அவர். அந்த அன்புக்காக வந்திருக்கிறேன்.
இதுபோன்ற ஒரு புகைப்பட கண்காட்சியை வேறு எங்கும் பார்க்க முடியாது. இப்படி அழகாக கண்காட்சியைக் கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.
ஒரு சகாப்தத்தையே கண் முன் காட்டியிருக்கிறார்கள். சென்னை மேயராக இருந்தது முதல் முதல்வர் வரை ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார், அவருடைய நட்பு என அத்தனையையும் காட்டியிருக்கிறார்கள். சிறப்பாக இருக்கிறது.
திருவண்ணாமலை மண்ணை பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருக்கலாம். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நல்லவிதமாக மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்றார்.
பிரியா
உதயசந்திரன் இடத்தில் முருகானந்தம்? அமைச்சரவையைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம்!
அரசியல் களத்தில் ஆளுநர் இறங்கக்கூடாது : உச்ச நீதிமன்றம்!