கள ஆய்வில் முதல்வர் திட்டத்திற்காக சேலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மண்டல அளவிலான 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுக்கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
கள ஆய்வில் முதல்வர் திட்டத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்ரவரி 15) காலை சேலம் விமான நிலையம் சென்றார்.
முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,தலைமைச் செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் வந்தார்.
அவருக்கு தமிழக காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்,சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் கள ஆய்வில் கலந்து கொள்வதற்காக சேலம் புறப்பட்டு சென்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட தொழில் துறையினர் மற்றும் விவசாயிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ மாணவியரை முதலமைச்சர் சந்திக்கிறார்.
மாலை 5 மணிக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட சட்ட ஒழுங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.
முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், ஸ்டீபன் ஜேசுபாதம், சரோஜ்குமார் தாக்கூர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி,
சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, துணை ஆணையாளர்கள் மாடசாமி, லாவண்யா, கோவை சரக காவல்துறைத் தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சேலம் வருகின்ற வழியில் முதலமைச்சர் திடீரென ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி காரில் வந்த முதலமைச்சருக்கு ஓமலூர் பகுதியில் ஏராளமான மக்கள் சூழ்ந்து நின்று வரவேற்பு அளித்தனர்.
இதனை அடுத்து மக்கள் தங்கள் மனுக்களை அவரிடம் வழங்குவதற்காக காத்திருந்தனர்.
உடனே தமிழக முதல்வர் காரில் இருந்து கீழே இறங்கி பொதுமக்களை சந்தித்து தற்போது மனுக்களை பெற்றார்.
கலை.ரா
ஆளுநர் நியமனம்: கட்சி பொறுப்பை ராஜினாமா செய்த சி.பி. ராதாகிருஷ்ணன்
“4 ரவுண்டு சுட்டதில் 3 ரவுண்டு குண்டு பாய்ந்தது” – கோவை ஆணையர் பேட்டி