Chief Minister Stalin will go to Delhi on June 1!

யார் பிரதமர் வேட்பாளர்? டெல்லி செல்லும் ஸ்டாலின்

அரசியல்

டெல்லியில் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து, 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) சார்பாக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்தியா கூட்டணி சார்பில் தற்போது வரை பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டம்:

இந்நிலையில், 7ஆம் கட்டத் தேர்தல் நடைபெறும் அதேநாளில் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில், தேர்தல் முடிவுகளை பொறுத்து அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பிரதமர் வேட்பாளராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வரும்  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார்.

“ஜூன் 1 காலை டெல்லி செல்லும் அவர், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று மாலை அல்லது ஜூன் 2ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புவார்” என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எப்படி இருந்த துணை வேந்தர்கள் இப்படியாகி விட்டார்களே!

ரூ.54 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை… வெள்ளி விலை எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *