ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
சுதந்திர தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 15) ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்துக்கு தமிழகத்தின் முக்கிய கட்சிகளுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார்.
ஆனால், இந்த தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.
எனினும் அரசு சார்பில் பங்கேற்போம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கோட்டையில் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பதவிக்கு முதல்வர் எப்போதும் மதிப்பளிப்பார். அதை என்றும் தவறியதில்லை. அந்த வகையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினும் இவ்விருந்தில் பங்கேற்கவுள்ளார்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
75,000 புதிய மருத்துவ சீட் : பிரதமர் மோடி அறிவிப்பு!
75,000க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் : புதிய திட்டங்களை அறிவித்த ஸ்டாலின்