டெல்லியில் பிரதமர் மோடியை வரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார்.
பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். நேற்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இச்சந்திப்பின் போது, 297 விலைமதிப்பற்ற பழங்காலப் பொருட்களை இந்தியாவுக்குத் திருப்பி தர அமெரிக்க அரசு உறுதியளித்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
அவர் இன்று நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
அதன்பின்னர் அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி நாடு திரும்ப உள்ளதாக திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி பிரதமர் மோடியை மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சமக்ர சிக்ஷா அபியான் அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இலங்கை அதிபர் தேர்தல் : விருப்ப வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?
இலங்கை அதிபர் தேர்தல்: முதல்முறையாக நடைபெறும் விருப்ப வாக்கு எண்ணிக்கை!