வானவில் மன்றம்: திருச்சியில் தொடங்கிவைத்த முதல்வர்

Published On:

| By Prakash

அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வானவில் மன்றம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) தொடங்கிவைத்தார்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்றார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாப்பாக்குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் ’வானவில் மன்றம்’ என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து, மாணவர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு இத்திட்டத்திற்காக ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

வணிக பயன்பாட்டுக்கு நிலம்: லாபத்தில் பங்கு தர பரிந்துரை!

ஆன்லைன் தடை காலாவதி: அடுத்தகட்டத்தில் தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel