கோட்டையில் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.  4ஆவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் கொடி ஏற்றினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(ஆகஸ்ட் 15) காலை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று அழைத்து சென்று முப்படை உயர் அலுவலர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரையும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

Image

பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து நாட்டுப்பண் இசைக்க  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி உரையாற்றி வருகிறார் ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கலைஞர் பெற்று தந்த உரிமை: 50ஆவது ஆண்டில் கொடியேற்றும் ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை:அவசர செயற்குழுவின் அஜெண்டா…   திருமா, கம்யூனிஸ்டுகளின் திசை… எடப்பாடி போட்ட போடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0