அனுமதியில்லாமல் போராடினால்… யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு : ஸ்டாலின்

Published On:

| By Kavi

அனுமதி இல்லாமல் போராடியதால் ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுகவினர் மீதும் வழக்குப்போடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 8) அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம் தொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது பாமக கவுரவ தலைவரும் பெண்ணாகரம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜி.கே மணி, அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. போராட்டத்தில் ஈடுபட்டால் போலீஸ் கைது செய்கிறது. ஆனால் திமுக மட்டும் போராட்டம் நடத்துகிறது என்று கூறினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், “ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் போராட்டம் நடத்த வேண்டும். அது அவருக்குத் தெரியும். நேற்று கூட அனுமதி பெறாமல் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுக மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

3 மாசத்துக்குள்ள…- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு!

சட்டப்பேரவை நேரலையில் காட்டப்படாத அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel