ஓ.பன்னீர்செல்வம் தாயார் மரணம்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அரசியல்

ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாளின் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). கடந்த 23ம்தேதி உடல்நலக் குறைவு காரணமாக பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நேற்று சென்ற ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரைப் பார்த்தார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்துவிட்டு சென்னைக்கு திரும்பினார்.

இந்நிலையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த ஒ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். தாயாரின் மறைவு செய்தி கேட்டதும் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து தேனி பெரியகுளத்துக்கு சென்றுள்ளார்.

பழனியம்மாளின் இறப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி பழனியம்மாள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.

ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பழனியம்மாளின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? சர்வே ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1

1 thought on “ஓ.பன்னீர்செல்வம் தாயார் மரணம்; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *