ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் மாளிகையில் 2022 ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடந்த தேநீர் விருந்தையும், 2023 பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த தேநீர் விருந்தையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
இதைத்தொடர்ந்து ஆளுநர் திராவிடம், சனாதனம், திருக்குறள், தமிழகம் ஆகியவை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு இதுவரை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இதனை திமுக கூட்டணி கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகியவை புறக்கணிப்பதாக அறிவித்தன.
திமுகவும் புறக்கணிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் தமிழக முதல்வருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் என்ன செய்வார் என்று கேள்வி எழுந்தது
இந்நிலையில் இன்று மாலை 4.20 மணியளவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சென்றார்.
ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்விருந்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் வெளியூரில் இருப்பதால் விருந்தில் பங்கேற்கவில்லை.
பிரியா
அமெரிக்காவை அசத்திய தமிழக இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது: யார் இவர்கள்?
வாணி ஜெயராம் பாடல்கள் – தேனில் குழைத்த தீந்தமிழ்!
Comments are closed.