தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 28) ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகளிலும், ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அதுகுறித்த விசாரணை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்தச்சூழலில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அன்றைய தினம் கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைப்பதற்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்தான் கலந்துகொண்டார்.
இந்நிலையில் இன்று இரவு 7.45 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக முதல்வர் வந்ததாக மருத்துவமனை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ.விடம் வழங்கியதில் தாமதமா?: அமைச்சர் பதில்!