ரூ.225 கோடி மதிப்பீட்டில் ஆசிரியர்களுக்கான புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளான இன்று (மார்ச் 1) அறிவித்தார்.
சென்னை டிபிஐ அலுவலகத்திலிருந்து இன்று காணொளி வாயிலாக புதிய திட்டங்களை அறிவித்தார்.
அப்போது அவர், “ஒருவர் வாழ்க்கையில் கற்கும் கல்வி அவரை எப்போதும் கைவிடாது. அதனால் தான் கல்வியை யாராலும் திருட முடியாது என்று சொல்கிறேன்” என்றார்.
7.5 சதவிகித இட ஒதுக்கீடு, காலை உணவுத் திட்டம், உயர் கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுவது, இல்லம் தேடி கல்வித் திட்டம் எனக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்த 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நிதியில் இருந்து, அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
அரசுத் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும், செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
பிரியா