Chief Minister said is a joke - Nayanar Nagendran

முதல்வர் பேசியது நகைச்சுவையாக இருக்கிறது: நயினார் நாகேந்திரன்

அரசியல்

காவிரி பிரச்சனையை விட, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போது மிக முக்கியம் என முதல்வர் கூறியிருப்பது 2023 ம் ஆண்டுக்கான மிகப்பெரிய நகைச்சுவை என தமிழக பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 18) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு குரல் கொடுக்காத தமிழக அரசுக்கு பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்துகொள்கிறது.

1974 ல் நதி ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் காவரி பிரச்சனை ஏற்பட்டது. பாஜக ஆட்சிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் நதி நீர் ஆணையம் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

தற்போது கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்கு தமிழக முதல்வர் கண்டனம் கூட தெரிவிக்க மறுக்கிறார்.

தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பேச தயங்குகிறார். தமிழக முதல்வர்.

அமலாக்க துறை சோதனைக்கும் பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. அது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. பாஜக தமிழர்களுக்கு எதிரான விசயங்களில் விட்டுக்கொடுக்காது.

தமிழக முதல்வர் 2024ல் பாஜக வெற்றியடைந்தால் இந்தியாவே இருக்காது.

இந்தியாவை பாதுகாக்கும் நோக்கில் எதிர்கட்சி கூட்டத்துக்கு செல்வதாக முதல்வர் சொல்லியுள்ளார். காவிரி பிரச்சனையை விட இந்தியாவை காப்பதே முக்கியம் என முதல்வர் சொல்லியிருப்பது 2023 ம் ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.

2024 தேர்தலில் இந்தியாவின் பிரதமராக மோடி வருவார்.

பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.மத்திய அரசு நீர்பாசன துறை மேகாதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு புதுவை மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை நடத்தாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என சொல்லியுள்ளது.

மத்திய அரசு தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தமிழகத்தில் 10 தொகுதிகளை கண்டறிந்து தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என ஆட்சி மன்ற குழு கூடி முடிவு செய்யும் என தெரிவித்தார்.

சரவணன், நெல்லை

அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி முடக்கம்: அமலாக்கத்துறை

“இந்தியாவின் கருத்தியலை பாதுகாப்பதற்கான யுத்தம்” – ராகுல் காந்தி

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *