புத்தாண்டையொட்டி இன்று (ஜனவரி 1) முதல் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் திடீரென கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கு அவர்கள் எங்கு சென்றாலும் கமாண்டோ படையினருடன் கூடிய பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.
விரைந்து பாதுகாப்பாக செல்வதற்காக அவர்களது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கத்தில் உள்ளது.
முதல்வருடன் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் இடம் பெறும்.
முன்னதாக 12ஆக இருந்த முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை, கடந்த 2021 ஆம் ஆண்டு 6-ஆக குறைக்கப்பட்டது.
அதன்படியே தினமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் திடீரென தற்போது முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்களின் நிறம் மாறி உள்ளது. இதுவரை வெள்ளை நிறத்தில் இருந்த முதல்வர் கான்வாய் நிறம், புத்தாண்டு தினமான இன்று முதல் கருப்பு வண்ணத்திற்கு மாறி இருக்கிறது. நிறம் மாற்றப்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
https://twitter.com/RAMJIupdates/status/1741723982574104763
இந்தியாவில் பெரும்பாலான முதல்வர்களின் கான்வாய் வெள்ளை நிறத்தில் உள்ளது. எனினும் குடியரசுத் தலைவர், பிரதமர், கேரளா முதல்வர் என குறிப்பிட்ட சிலரின் கான்வாய் நிறம் மட்டுமே கருப்பு நிறுத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
TheGOAT2ndLook : அர்ச்சனாவிடம் உறுதி செய்த வெங்கட் பிரபு!
பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானை தாக்கிய சுனாமி!
‘கனவில் வருவது பிடிக்கும் என்றேன்’ மணியை கிண்டலடித்த போட்டியாளர்கள்!