மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று(டிசம்பர் 10)ஆலோசனையில் ஈடுபட்டார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(டிசம்பர்10) அதிகாலை 2.30 மணிக்கு கரையைக் கடந்தது. இதன்காரணமாக நேற்று முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன், கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்சென்னை மற்றும் வடசென்னை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன்பிறகு, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சேகர்பாபு தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிக்கைகளை கேட்டுப்பெற்று தேவையான உதவிகள் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.
மேலும், மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் எந்த மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை சந்திக்கின்றன என்பதை ஆய்வு செய்து அவற்றை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று முதலமைச்சர் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தியிருக்கிறார்.
கலை.ரா
“விடிய, விடிய கலெக்டர்களிடம் பேசினேன்” – ஆய்வுக்கு பின் முதல்வர் பேட்டி
முதல்வர் போனை எடுக்காத கலெக்டர்: காரணம் என்ன?