சத்தீஸ்கர் : தோல்வியை தழுவிய அமைச்சர்கள்!

Published On:

| By Kavi

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் மாலை 4.28 மணிக்கு வெளியிட்ட தகவல்படி, 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

பாஜக பெரும்பான்மையை காட்டிலும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் வெற்றி அறிவிப்பை தேர்தல் ஆணையம் முழுமையாக வெளியிடவில்லை என்றாலும், தற்போதைய தகவல்படி, பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியிருக்கிறது.

காங்கிரஸைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வரான பூபேஷ் பாகல் தான் போட்டியிட்ட பதான் தொகுதியில் 81072 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அதே தொகுதியில் போட்டியிட்ட அவரது மருமகன் விஜய் பாகேல் 64927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் மற்றொரு முக்கிய வேட்பாளரான 15 ஆண்டுகால முன்னாள் முதல்வர் ராமன் சிங். பாஜகவைச் சேர்ந்த இவர் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸைச் சேர்ந்த கிரிஷ் தேவாங்கன் போட்டியிட்டார்.

இதில், ராமன் சிங் 96328 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். கிரிஷ் தேவாங்கன் 52438 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்வருமான டிஎஸ் சிங் தியோ, 37321 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளரான ராஜேஷ் அகர்வாலிடம் (44981 வாக்குகள்) தோல்வியை சந்தித்துள்ளார்.

இதுபோன்று காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த 9 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

துர்க் கிராமப்புற பகுதியில் போட்டியிட்ட மாநில உள்துறை அமைச்சர் தாம்ரத்வாஜ் சாஹு, பாஜக வேட்பாளர் லலித் சந்திரசேகரைக் காட்டிலும் 16012 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

அமைச்சர்கள் ஜெய் சிங் அகர்வால், அமர்ஜீத் பாகத், ஷிவ்குமார் தகாரியா, ரவீந்திர சவுபே, முகமது அக்பர், மோகன் மார்கம் உள்ளிட்டோர் தோல்வியை தழுவியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தெலங்கானா காங்கிரஸ் வெற்றி: சத்தியமூர்த்தி பவனில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

தெலங்கானா: கேசிஆர், ரேவந்த் ரெட்டியை ஓவர்டேக் செய்த பாஜக வேட்பாளர்

தமிழ்நாட்டில் அதி கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share