அரசு பள்ளி மாணவர்களை அங்கீகரித்த செஸ் ஒலிம்பியாட்!

அரசியல்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மிக பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதுபோன்ற பிரமாண்ட விளையாட்டு நிகழ்வுகளின் தொடக்கத்தில் வந்திருக்கும் நாடுகளை வரவேற்கும் கொடி அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், செஸ் ஒலிம்பியாட் தொடரில் நடந்த அணிவகுப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 186 பேர், அணிவகுப்பில் நாடுகளின் பெயர் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.