செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்திய தமிழகத்திற்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் போட்டியை சிறப்பாக நடத்தியதாக தமிழக அரசை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் பிரதமர் மோடி. இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத குணாதிசயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவிலான விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்கவேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கலை.ரா
ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்: காரணம் என்ன?
+1
+1
2
+1
+1
1
+1
+1
+1