செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று(ஆகஸ்ட் 9) நிறைவடைந்தது.
11 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்றன. இறுதிச்சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

ஆனாலும், அனைத்து சுற்றுகளின் முடிவில் 18 புள்ளிகளை பெற்று இந்திய ‘பி’ அணி வெண்கலம் வென்றது. இந்த ‘பி’ அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், சரின் நிஹால், ரோனக் சத்வானி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கத்தையும், அர்மீனியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது. பெண்கள் ‘ஏ’ பிரிவில் 17 புள்ளிகள் பெற்று இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

இதில், உக்ரைன் அணி தங்கப் பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியது. பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த இரண்டு அணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை அறிவித்து இருக்கிறார். 2 அணிகளுக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.
கலை.ரா
செஸ் நிறைவு விழா: ஆளப் போறான் தமிழன்… கோட்சூட்டில் மேடைக்கு வந்த ஸ்டாலின்!