லண்டனுக்கு இணையாக சென்னை ! அமைச்சர் எ.வ.வேலு

அரசியல்

சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இன்று (அக்டோபர் 4 ) ஆய்வு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு : “மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக சென்னை மக்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் எனவும் கூறினார்.

மேலும், கூவம் நதி சென்னை முழுவதும் ஓடும் நதி. மழைக்காலத்திற்கு பின்னர், கூவம் நதியை சீர் செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

அதன்பிறகு லண்டனில் நாம் பார்ப்பதைப்போல் இங்கும் காண முடியும். மதுரவாயல்-துறைமுகம் மேம்பால விரைவு 2024 ஆம் ஆண்டு திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மழைநீர் வடிகால்: முதல்வர் கெடு, பணிகள் ஸ்பீடு!

பெண்கள் ஆசிய கோப்பை டி20: இந்திய அணி அபார வெற்றி

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.