வானகரத்தில் போக்குவரத்து மாற்றம்!

அரசியல்

வானகரத்தில் பொதுக்குழு நடப்பதால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழுவுக்காக இன்று (ஜூலை 11) காலை முதல் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற அன்று வானகரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழிநெடுகிலும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆங்காங்கே நின்று தங்கள் தலைவர்களின் வாகனங்களை நிறுத்தி வரவேற்பு அளித்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவை முன்னிட்டு வானகர சாலை பகுதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால்,

வாகன ஓட்டிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளது.

அதோடு பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *