பாஜக நிர்வாகி உமா கார்கி இன்று (ஜூன் 24) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னைக்கு அழைத்து வந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். ட்விட்டரில் உமா கார்கி என்ற பக்கத்தில் இயங்கி வருகிறார். இவர், ‘தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை பற்றி அவதூறாகக் கருத்து பதிவிட்டு வருகிறார்’ என திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஹரிஷ் கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை போலீசார் கைது செய்தனர்.
இவரை கடந்த ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போலீசார் கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே நடிகர் விஜய் குறித்து ஆபாசமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டது தொடர்பாகச் சென்னை எழும்பூர் சைபர் க்ரைம் பிரிவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உமா கார்த்திகேயன் மீது புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உமா கார்த்திகேயன் சென்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உமா கார்கியை போலீசார் புழல் சிறையில் அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பிரியா
இந்தியாவிற்கும் தனக்குமான உறவு: கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி!