அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிரான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்தார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்ரவ்ரி 16) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்டவிரோதமாக கூடிய குற்றமாக கருத முடியாது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
SK 23: மிருணாள் தாகூர் நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்?
இது என்னப்பா புது பழக்கம்? : அப்டேட் குமாரு
எலெக்ஷன் ஃப்ளாஷ்: வேடம் கலைத்த கஸ்தூரி…கெளதமியின் இடத்திற்கு போட்டி!