o panneerselvam appeal against chennai high court order

அதிமுக பொதுக்குழு வழக்கு: நாளை தீர்ப்பு!

அரசியல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 25) காலை தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற சட்ட விதி ரத்து, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனம்,  ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளில், ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டது.

அதன்படி அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமரேஷ் பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கின் விசாரணை மொத்தம் 7 நாட்கள் நடைபெற்றது. பின்னர் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்பட்டது அவரது தரப்பு ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பது அதிமுகவின் இரு தரப்பினர் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

.கிறிஸ்டோபர் ஜெமா

ஸ்டாலினை ’அண்ணன்’ என்று அழைத்த வீர முத்துவேலின் தந்தை: ஏன்?

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி கையில் எம்பி வேட்பாளர் பட்டியல்… அமைச்சர்கள் ஷாக்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *