அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு, மருத்துவமனை இடமாற்றம் உள்ளிட்ட 3 வழக்குகள் மீது இன்று (ஜூன் 15) தீர்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜியின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் கீழ் நேற்று அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை இயக்குனர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை எதிர்வரும் 28ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ,அமலாக்கத் துறையின் வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதும் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த 3 மனுக்கள் மீது நீதிபதி எஸ்.அல்லி இன்று விசாரித்து தீர்ப்பு அளிக்க உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு வெஜிடபுள் போண்டா