டெண்டர் முறைகேடு : வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு!

அரசியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

740 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட டெண்டரில் பலமுறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (செப்டம்பர் 17) வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முதற்கட்ட விசாரணை செய்த பின்னர் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Image

 

முன்னாள் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி உட்பட 11 பேர் மீது, ஊழல் தடுப்புச் சட்டம் 2018 – 120(8)r/w 420,409 IPC, 13(2) r/w 7 and 13(1)(a) உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், 1.11.2018, 7.11.2018, 1.12.2018, 03.1.2019, 26.9.2019 மற்றும் 14.2.2020 ஆகிய தேதிகளில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் இருந்து  6 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்த தமிழக அரசிடம் இருந்து கிடைத்த அனுமதியை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையை தொடர்ந்து வேலுமணி, சென்னை மாநகராட்சி நிர்வாக பொறியாளர்கள் முருகன், சரவணமூர்த்தி, பெரியசாமி, நச்சன், ஓய்வு பெற்ற மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் சின்னசாமி மற்றும் சுகுமார், விஜயக்குமார், நந்தகுமார், புகழேந்தி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அடுத்த 2 மாதங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கித்தர வழிவகை செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – மூலம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

ஜாபர் சாதிக் வழக்கு… அமீர் உள்பட 12 பேர் மீது ED குற்றப்பத்திரிகை தாக்கல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *