சென்னை மாநகராட்சி தேர்தல் முடிந்து, மேயர், கவுன்சிலர்கள் பணியாற்றி வரும் நிலையில், மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.
இதற்கிடையே சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடைபெறும் என மேயர் பிரியாராஜன் அறிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இக்கூட்டத்தில், தேவையான நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு தேவைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்
தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை வழங்கிய முதல்வர்