Chennai corporation budget student shoes socks

பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சீருடைகள்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!

அரசியல்

2024-25-ஆம் ஆண்டிற்கான மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்ரவரி 21) மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 1 செட் Shoe மற்றும் 2 செட் Socks   வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து மேயர் பிரியா கூறும்போது,

“2024-2025 ஆம் கல்வியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் கல்வித்துறையின் கீழ் உள்ள 208 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப்பள்ளிகள்,  46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும்  35 மேல்நிலைப்பள்ளிகளில்,  LKG  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் தலா 2 எண்ணிக்கையில் 1,20,175  மாணவ மாணவிகளுக்கு சீருடை துணிகள் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பள்ளி  மாணாக்கர்களின் பாதுகாப்பு நலன் கருதி தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக 255 பள்ளிகளில்  கண்காணிப்பு  கேமராக்கள்  பொருத்தப்படும்.

208   தொடக்க    மற்றும்  130   நடுநிலைப்  பள்ளிகளில்  LKG வகுப்பு  முதல் 5-ஆம்  வகுப்பு   வரை  பயிலும்    64,022   மாணாக்கர்களுக்கு  ரூ.3.59 கோடி மதிப்பீட்டில்  முதல்  முறையாக 1 செட் Shoe மற்றும் 2 செட் Socks   வழங்கப்படும்.

சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களில், திறமை மிக்க மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் இணையதளம் வாயிலாகவும் SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELLENCE  என்ற பயிற்சி பள்ளியில் சேர்த்து பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கூட்டணி அறிவிப்பு எப்போது?- கமல்ஹாசன் பேட்டி!

டிராக்டர்கள், ஜேசிபிக்களோடு டெல்லியை நோக்கி விவசாயிகள்! மீண்டும் கண்ணீர்ப் புகை குண்டுகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *