போராட்ட களமாய் சென்னை : அண்ணாமலை

Published On:

| By Kavi

ஆசிரியர்களை தொடர்ந்து செவிலியர்கள்  இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சென்னை போராட்ட களமாக மாறியுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக மையக் குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது.
சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுகவினர் தமிழகத்தின் உரிமையை எல்லா இடத்திலும் விட்டுக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றாததால் செவிலியர்கள், ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். சென்னை போராட்டக்களமாக மாறியிருக்கிறது.

எப்படி மக்களின் நலனை காப்பது என்பது குறித்து நாங்கள் பேசினோம். நேற்று சட்டப்பேரவையில் காவிரி நீர் குறித்துக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருதலைபட்சமானது. இதற்கும் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமுமே கிடையாது.

திமுகவும் கர்நாடகாவில் இருக்கக்கூடிய காங்கிரஸும் சேர்ந்து கபடி விளையாடுவது போல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கொன்று பேசுகிறார்கள். இங்கொன்று பேசுகிறார்கள். இதையெல்லாம் மக்களிடம் சொல்ல வேண்டும். இதுதான் நம்முடைய நோக்கம்.

10 ஆண்டு காலம் மோடி ஆட்சியில் என்னென்ன நலத்திட்டங்கள் செய்தார்கள் என்றும் இந்த 35 மாதம் திமுக ஆட்சியில் என்னென்ன தவறுகளைச் செய்தார்கள் என்றும் மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும். இதுகுறித்து விவாதித்தோம்.
மற்றபடி மையக்குழுவின் வேறு எதுவும் பேசவில்லை” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜி.வி.பிரகாஷ் 25வது படத்தின் டைட்டில் வெளியானது..!

ICC worldcup 2023: மாஸ் காட்டிய மாலன்… வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel