அமர் பிரசாத் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

அரசியல்

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று (நவம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.

பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவராகவும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கரமாகவும் இருந்து வருபவர் அமர் பிரசாத் ரெட்டி.

கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பனையூரில் உள்ள அண்ணாமலை வீடு முன்பு நடப்பட்ட கொடிக்கம்பத்தை காவல்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இந்த விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஜாமீன் கோரி அமர் பிரசாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில், நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருந்த இடத்தில் அமர்பிரசாத் ரெட்டி மட்டும் கல்லை வீசினாரா? என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்றும் அமர்பிரசாத் தரப்பு ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தற்போது ஜாமீன் வழங்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர்பிரசாத் ரெட்டி தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆப்கனுடன் நேரடியாக தகுதி பெற்ற ’அந்த 6 அணிகள்’ எவை?

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை வழக்கில் இருவர் சரண்!

 

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *