உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
க்யூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சே குவாரா. இவரது மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அலேய்டா குவாரா தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். முன்னதாக கேரளா சென்று கம்யூனிஸ்ட் அரசியல் தலைவர்களை சந்தித்த இவர் இன்று(ஜனவரி 17)சென்னை வந்தார்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அலெய்டா குவாராவை சென்னை விமான நிலையத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், ஆகியோர் வரவேற்றனர்.
கியூப சோசலிசத்தின் மாண்புகளை பறைசாற்றவும், கியூபா மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் நாளை(18.01.2023) சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திமுக, சிபிஎம், மதிமுக தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக சிபிஎம் தெரிவித்துள்ளது.
கலை.ரா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : பார்வையாளர்கள் மீது போலீசார் தடியடி!
நியூசிலாந்து ஒருநாள் தொடர் : இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்!
Comments are closed.