சத்தீஸ்கர்: வெற்றியை நோக்கி பாஜக!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி நிலவரப்படி பாஜக 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க, 46 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் தற்போது பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தனது பதான் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரான அவரது மருமகன் விஜய் பாகேலை விட சற்று பின் தங்கியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ராஜஸ்தான் : ஆட்சியை பாஜகவிடம் இழக்கிறதா காங்கிரஸ்?

சண்ட செய்யும் உறியடி விஜய்… கமல் பாடல் ரெபரன்சில் “Fight Club” டீசர்!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0