பிரிட்டன் மன்னராக இன்று (செப்டம்பர் 10) அரியணையில் அமர்ந்தார் மூன்றாம் சார்லஸ்.
பிரிட்டன் ராணியும் சார்லஸின் தாயாருமான இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரவு காலமானார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப்பின், அரியணை ஏறும் நபராகவும், காமன்வெல்த் தலைவராகவும் இளவரசர் சார்லஸ் கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராணி 2ம் எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸை, மன்னர் 3ம் சார்லஸாக லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அசெஷன் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து, அவர் இன்று பிரிட்டன் மன்னராகியுள்ளார். ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் மன்னருக்கான அரியணையில் அமர்ந்தார் மூன்றாம் சார்லஸ்.
இந்த முடிசூட்டு விழாவில் முன்னாள் பிரதமர்கள் தெரசா மே, போரிஸ் ஜான்சன், தற்போதைய பிரதமர் லிஸ் ட்ரெஸ் மற்றும் அனைத்து எம்.பிக்கள் பங்கேற்றனர்.
முடிசூட்டு விழாவையொட்டி லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
மன்னராகப் பதவியேற்ற 3வது சார்லஸ், “தனது தாயாரின் வழியில் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார்.
மருதநாயகம் படப்பிடிப்பில் ராணி எலிசபெத் : அன்று நடந்தது என்ன?