தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Change of ministerial portfolios
அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் இருந்த காதி கிராம வாரியத் துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இனி வனத்துறையுடன் சேர்த்து காதி கிராம வாரியத் துறையையும் பொன்முடி பார்த்துக்கொள்வார்.
பால்வளத்துறை அமைச்சராக மட்டும் ராஜ கண்ணப்பன் தொடர்கிறார்.

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த அறிவிப்பை இன்று (பிப்ரவரி 13) வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 2023ல் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது அவரிடம் இருந்த உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை கூடுதலாக ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் உச்ச நீதிமன்றம் சென்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்கி வந்தார். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்க்கல்வித் துறை பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த உயர்க்கல்வித் துறை கடந்த அக்டோபர் மாதம் கோவி செழியனிடம் கொடுக்கப்பட்டு, வனத்துறை இலாகா பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
இந்தசூழலில் தற்போது பொன்முடிக்கு கூடுதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. Change of ministerial portfolios