சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த சட்டத்திருத்தம் தேவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். நீதிமன்றங்களில் சிறப்பான உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாவட்ட நீதிமன்றங்களில் சுத்தமான கழிப்பறைகள் கூட இல்லாத நிலை உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையான சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதை பொறுத்தவரை அரசியலமைப்பு சட்டதிருத்தம் தேவைப்படுகிறது.
கோவிட் தொற்றின் போது 2.68 கோடி வழக்குகள் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. தொழில்நுட்ப வசதியால் எளிதாக வழக்குகளை கையாள முடிந்தது.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் நீதிமன்ற தொழிலில் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.
இளம் வழக்கறிஞர்களுக்கு ஆங்கிலத்தில் வழக்காடுவது சிரமமாக உள்ளது. ஆங்கிலம் நமது தாய்மொழி அல்ல. ஆங்கிலத்தில் வழக்காட முடியவில்லை என்று இளம் வழக்கறிஞர்கள் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளம் வழக்கறிஞர்களுக்கு உத்வேகமாக இருங்கள்.
நான் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றவுடன் உச்சநீதி மன்றத்தின் அனைத்து தீர்ப்புகளையும் இலவசமாக அனைவரும் படிக்கும் வகையில் டிஜிட்டலாக மாற்றினேன்.
நீதிபதிகள் நியமனத்திற்கான எனது தலைமையிலான 6 உறுப்பினர்களை கொண்ட கொலிஜியம் பெண்கள், பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜித்தில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று வரையறை வழிவகுத்தது.
இந்தியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார்கள். பெண்களுக்கு நாம் தொடந்து சம வாய்ப்பை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
ராகுல் தகுதிநீக்கம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!
மோடி- அதானி உறவு பற்றி கேள்வி எழுப்பியதால்தான் பதவி பறிக்கப்பட்டது: ராகுல் காந்தி