மோடிக்காக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தேதி மாற்றம்!

அரசியல் இந்தியா

வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருந்த சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் கடந்த 4ஆம் தேதி வெளியானது.

அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம் பெற்ற ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றன. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது.

இதன்மூலம் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 164 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தார் சந்திரபாபு நாயுடு.

இதனையடுத்து அவர் 4வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்பார் என்றும், பதவியேற்பு விழா வரும் 9ஆம் தேதி அமராவதியில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஜூன் 8ம் தேதி பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் தேசிய கூட்டணியில் தற்போது முக்கிய இடம்பிடித்துள்ள சந்திரபாபு நாயுடு பங்கேற்கவுள்ளார்.

அதனால் 9ஆம் தேதி நடைபெறவிருந்த சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டு வரும் 12ஆம் தேதி புதன்கிழமை நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: சட்டென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை – எவ்வளவு தெரியுமா?

Share market : உலக சாதனை படைத்த NSE!

 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *