சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா… எமோஷனல் மொமண்ட்ஸ்!

அரசியல் டிரெண்டிங்

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகள், கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21, பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தன.

இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தில் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் மற்றும் அவரது சகோதரரும் நடிகருமான சீரஞ்சீவி இருவரது கைகளையும் சிரித்த முகத்துடன் மக்கள் முன்பு உயர்த்தி காட்டினார் பிரதமர் மோடி. பின்னர் இருவரது முதுகிலும் தட்டிக்கொடுத்தார்.

 

பதவியேற்பு விழா நடந்து முடிந்ததும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவரும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பெருமாள் சிலையை அன்பளிப்பாக கொடுத்தனர்.

ஆந்திர மாநில முதல்வர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொண்டனர். விழா மேடையில் சிரஞ்சீவின் அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த், அவரது கையை பிடித்து பேசிக்கொண்டிருந்தார். அதேபோல பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் ரஜினிகாந்துடன் பேசினர்.

விழா மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியும், தனது சகோதரியுமான புவனேஷ்வரிக்கு நடிகர் பாலகிருஷ்ணா அன்பு பொங்க நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினார்.

தொண்டர்களின் ஆரவார முழக்கத்திற்கிடையே பதவியேற்றுக்கொண்ட பவன் கல்யாண், தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து வணங்கினார். பவன் கல்யாண் பதவியேற்றபோது, அவரது மனைவி அன்னா லெஷ்னேவா கண்கலங்கினார். இந்த சம்பவம் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் தொனியில் மேடையில் வைத்து பேசிய வீடியோ காட்சிகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்தியின் அசரவைக்கும் அப்டேட் – அடுத்தடுத்து இத்தனை படங்களா?

“தமிழிசையை அவமதித்த அமித்ஷா” – கேரள காங்கிரஸ் கண்டனம்!

 

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *