வங்கதேச உள்நாட்டு கலவரம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்று வருகிறது.
வங்கதேச நாட்டில் மாணவர்கள் போராட்டத்தால் வெடித்த கலவரத்தையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைக்கும் என்று இராணுவத் தலைவர் ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், மத்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித்தோவல், ஷேக் ஹசீனாவை நேற்று (ஆகஸ்ட் 5) சந்தித்து பேசினார். வங்கதேச நிலவரம் குறித்து அஜித் தோவல் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக சார்பில் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்களிடம் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜெய்சங்கர் விளக்கி வருகிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை மேயர்: சிறையில் இருந்து செலக்ட் செய்த செந்தில்பாலாஜி
வங்கதேச கலவரம்… மோடி அவசர ஆலோசனை!