|

கண் அசைத்த அமித்ஷா… மத்திய அமைச்சராக இருந்து கொண்டே நடிக்க வருகிறார் சுரேஷ் கோபி!

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியான நடிகர் சுரேஷ் கோபி தனி பொறுப்புடன் கூட மத்திய அமைச்சராக உள்ளார். இதையடுத்து அவருக்கு கேரள பிலிம் சேம்பரில்  நேற்று  பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய , நடிகர் சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதற்காக மத்திய அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சுரேஷ் கோபி பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடத்தில் தான் 22 படங்களில் நடித்து கொண்டிருப்தாக தெரிவித்தேன். அதனால், தனக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். முதலில் யோசித்தவர் பின்னர் படங்களில் நடிக்க அனுமதி தந்தார். செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ள ஒத்தக் கொம்பன் படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், அமைச்சராக இருப்பதால் தன்னுடன் எப்போதும் 4 மத்திய அரசு அதிகாரிகள் இருப்பார்கள். படத் தயாரிப்பாளர்கள் அவர்களுக்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, தனி கேரவன் தர வேண்டும். அப்போதுதான் எனது அமைச்சரவை பணிகள் பாதிக்காமல் இருக்கும்.

சினிமாவில் நடிப்பதுதான் தனக்கு பிடித்தமானது. எனினும்,எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த திருச்சூர் தொகுதி மக்களின் அன்புக்காக மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என்றார்.

சுரேஷ் கோபிக்கு  மத்திய அமைச்சராக பதவி தர முடிவு செய்யப்பட்ட போதே, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிறகு இதுவரை மூன்று முறை திருச்சூரில் சுரேஷ்கோபி  களம்கண்டுள்ளார் . 2019-ல் மக்களவை தேர்தலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்தார். தொடர்ந்து,  2021 சட்டமன்ற தேர்தல். இந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது.

ஆனால், இந்த தேர்தல்களில் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்தது. அதனால், கேரளாவில் தனது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்துக்கு சுரேஷ் கோபியே சரியான நபர் என்று கருதிய அமித்ஷா,  2024 மக்களவை தேர்தலிலும் சுரேஷ் கோபியையே டிக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

வாகை மலருக்கு இத்தனை சிறப்புகளா! : எப்படி யோசித்தார் நடிகர் விஜய்?

இந்தியாவுக்கு எதிராக 10 ஆண்டுகள் தொடர் தோல்வி… ஸ்டீவ் ஸ்மித் சொல்வது என்ன?

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts