வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவின் மத்தியப் பகுதிக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023-24-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசும்போது, “மூலதன முதலீட்டு செலவு 33 சதவிகிதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவிகிதமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66 சதவிகிதம் அதிகரித்து ரூ.79,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்தை மையமாக வைத்து விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதுவரை ரூ.47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும். 157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவின் மத்தியப் பகுதிக்கு ரூ.5,300 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.” என்று தெரிவித்தார்.
செல்வம்
கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் விடுவிப்பு!
இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
“இந்தியப் பொருளாதாரம் 10-ஆவது இடத்திலிருந்து 5-வது இடம்”: நிர்மலா சீதாராமன்