திமுக தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இன்று (ஏப்ரல் 16) இமெயில் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பரப்புரை நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் செல்போன் உரையாடல்களை மத்திய பாஜக அரசு ஒட்டுக்கேட்டு வருகிறது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் உளவுத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்கும் செயலில் ஈடுபடுகிறார்கள். இதனை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தங்களது செல்போன் எண்கள் திமுக அரசால் ஒட்டுக்கேட்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
1,143 பணிகள்… யுபிஎஸ்சி தேர்வு முடிவு வெளியீடு!
IPL 2024: முஸ்தபிசுர் தொடர்ந்து சென்னைக்காக விளையாடுவாரா?… வெளியான புதிய தகவல்!