டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன்!

அரசியல்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ இன்று (ஏப்ரல் 14) சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மதுபான கொள்கையின்படி, தனியாருக்கு மதுபான உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதனால் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்பப்பெறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏப்ரல்-16ஆம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ இன்று(ஏப்ரல் 14) சம்மன் அனுப்பியிருக்கிறது.

மு.வா.ஜெகதீஸ் குமர்

பாஜக பகை அல்ல: ‘A படம்’ விழாவில் திருமாவளவன்

சித்திரைத் திருவிழா: அழகர்கோவில் துணை ஆணையர் ஆய்வு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0