நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி வரும் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்து வருகிறது.
மாதவ ராவ் உட்பட சிலர் மீது சிபிஐ-யினால் பதியப்பட்ட குட்கா சம்மந்தமான வழக்கு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நேரில் ஆஜரான சிபிஐ விசாரணை அதிகாரி, இன்னும் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி வழக்கினை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதே நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இயக்குநகரத்தால் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 30 பேர் மீது பதிவு செய்யப்பட்ட குட்கா ஊழல் தொடர்பான வழக்கையும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.
இதுமட்டுமல்லாமல் பண முறைகேடு தொடர்பான வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையை மேற்கொண்டு வருகிறது. குட்கா வழக்கில் அவரது பெயரும் அடிபட்டிருப்பதால் குட்கா வழக்கு விசாரணை வளையத்திற்குள் அவரும் வருவதற்கான வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் அதிமுகவினர்.
பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுகவிற்கு பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டு வருவது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜோதிமணிக்கு கடைசி வரை செக் வைத்த செந்தில் பாலாஜி
சிவகங்கை: சிதம்பரத்தை சீண்டிய திருநாவுக்கரசர்
திருவள்ளூர்: ஜெயக்குமாரா? சசிகாந்த் செந்திலா?
ஜெ.வுக்கு அல்வா கொடுத்த ஆளு நம்ம ஆளு கர்மா விடாது