டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் சோதனை : மறுக்கும் சிபிஐ

Published On:

| By christopher

தனது அலுவலகத்தில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) இன்று சோதனை நடத்தியதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். எனினும் இதனை சிபிஐ மறுத்துள்ளது.

தமிழ்நாட்டைப் போன்று ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியிலும் ஆளுநரின் அரசியல் குறுக்கீடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மதுபானக் கடைகளுக்கு முறைகேடாக உரிமம் வழங்கியதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது பாஜக குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது.

இதனையடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அளித்த அனுமதியின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிசோடியாவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் பலமுறை சோதனை நடத்தினர்.

இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று மீண்டும் சிபிஐ அதிகாரிகள் எனது அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

அவர்கள் எனது வீட்டில் சோதனை நடத்தினர். எனது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். எனது லாக்கரைத் தேடினர். எனது கிராமத்திலும் சோதனை நடத்தினர்.

ஆனால் நான் எந்த தவறும் செய்யாததால் அவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஆவணங்கள் சேகரிக்க சென்றோம்

இதற்கிடையே சிசோடியாவின் அலுவலகத்தில் இன்று எந்த சோதனையும் நடத்தவில்லை என்று சிபிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஒரு ஆவணத்தை சேகரிப்பதற்காக சிசோடியாவின் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்” என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

விஜய், அஜித் சம்பளமும்: வாரிசு – துணிவும் வசூலும்!

”80 வயது முதியவனாக பார்க்கிறார்கள்” : முரளிவிஜய் வேதனை