சிபிஐ நாட்டின் உண்மை மற்றும் நீதிக்கான பிராண்ட் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் சிபிஐ இயங்குகிறது. இந்த விசாரணை அமைப்பு 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிபிஐ அமைப்பின் வைரவிழா இன்று (ஏப்ரல் 3) டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘ஜனநாயகம் மற்றும் நீதிக்கு மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது. ஊழலிலிருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐயின் முக்கிய பொறுப்பு.
உண்மை மற்றும் நீதிக்கான முத்திரையாக சிபிஐ உருவெடுத்துள்ளதால் சிபிஐ விசாரணை கேட்டு மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். சிபிஐ போன்ற திறமையான நிறுவனங்கள் இல்லாமல் இந்தியா முன்னேற முடியாது.
வங்கி மோசடி தொடங்கி வனவிலங்குகள் தொடர்பான மோசடி வரை சிபிஐயின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் சிபிஐயின் முக்கிய பொறுப்பு இந்தியாவை ஊழல் அற்ற நாடாக மாற்ற வேண்டும்.
2014க்கு முந்தைய காலகட்டத்தில் நமது பொருளாதாரம் மற்றும் வங்கி முறையின் அடிப்படையை ஊழல் நடைமுறைகள் சிதைத்துவிட்டன. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஊழல் செய்யப் போட்டி இருந்தது. அப்போது பெரிய பெரிய ஊழல்கள் நடந்தன. ஊழல் செய்தவர்கள் பயப்படாமல் இருந்தனர்.
ஏனென்றால் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் 2014க்கு பிறகு அப்படி இல்லை. கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மிஷன் அடிப்படையில் செயல்பட்டோம். ஊழல் இருக்கும் இடத்தில் இளைஞர்களுக்குச் சரியான வாய்ப்பு இருக்காது. திறமைக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி” என்றார்.
அதுபோன்று மத்திய அரசின் ஒவ்வொரு துறையும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
பிரியா
ராகுல் மேல்முறையீடு : ஜாமீன் நீட்டிப்பு!
ஏரோப்ளேன் மோடு: கலாஷேத்ரா ஹரிபத்மனை போலீஸ் தூக்கியது எப்படி?
இந்த ஆளு ஊழல் பற்றி சொல்லி சொல்லி மக்கள ஏமாத்துறார், முந்தைய ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் எத்தன பேருக்கு தண்டனை கொடுத்திருக்கு? தனி நபர் அதானிக்கு நாட்டின் பொது துறை அத்தனையும் கொடுத்து இப்போ நஷ்டம், அதானிக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்று சொல்ல தைரியம் இருக்கா, மக்கள் என்ன முட்டாள்களா? குஜராத்தி கொள்ளையர்களிடம் நாட்டை மீட்பதே ராகுளின் மூச்சு.
பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?