56 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது சிபிஐ வழக்கு: தமிழகத்தில் எத்தனை?

அரசியல்

கடந்த ஆறு ஆண்டுகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மக்களவையில் இன்று (டிசம்பர் 7) தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிற மற்றும் இந்த ஆண்டின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்த கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் மற்றும் 17 அமர்வுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தொடரின் போது மக்களவையில் பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்த அறிக்கையில்,

கடந்த 2017 முதல் 2022 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 18 மாநிலங்களைச் சேர்ந்த 56 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 56 பேரில் 22 பேர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 18 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆந்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.  அடுத்ததாக உத்தரப் பிரதேசம் கேரளாவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தலா ஆறு பேர் மீதும், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஐந்து பேர் மீதும், தமிழ்நாட்டில் நான்கு பேர் மீதும்,. டெல்லி பிகார் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தலா 3 பேர் மீதும், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் மீதும், லட்சத்தீவு மகாராஷ்டிரா மத்திய பிரதேஷ் உத்தரகாண்ட் மேகாலயா சத்தீஸ்கர் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

மாண்டஸ் புயலின் வேகம்: வெதர்மேன் அப்டேட்!

படக்குழுவினருக்கு கார்த்தி வழங்கிய காஸ்ட்லி பரிசு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0